16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - ஆட்டோ ஓட்டுனர் கைது

சென்னை எண்ணூரில் பதினாறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - ஆட்டோ ஓட்டுனர் கைது
x
சென்னை எண்ணூரில், பதினாறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக அழகு நிலையத்திற்கு வேலைக்கு சென்ற மகள் மாயமானதாக தந்தை அளித்த புகாரில் போலீசார் விசாரணையை தொடங்கினர். விசாரணையில், சிறுமியின் செல்போன் எண்ணை வைத்து, வண்ணாரப்பேட்டையில் வீடு ஒன்றில் அவர், அடைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர். அங்கு சென்ற போலீசாரிடம்,   ஆட்டோ ஓட்டுனர் ஜெகதீசன், நண்பர் வீட்டில் அடைத்து வைத்து, பாலியல் துன்புறுத்தல் செய்ததாக சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து சிறுமியை மீட்ட போலீசார், ஜெகதீசனை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்