உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு நிதி திரட்டி தரும் வலைதளம் - 16 மாதங்களில் 100 நோயாளிகளுக்கு நிதி

உயிர் காக்கும் உறுப்பு மாற்று சிகிச்சைக்கு பணம் இன்றி தவிக்கும் மக்களுக்கு உதவும் வகையில் மிலாப் என்ற பொது நிதி திரட்டல் தளம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதை அனைத்து தரப்பினரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
x
இந்தியாவில் கல்லீரல், சிறுநீரகம், இதயம் போன்ற மிக முக்கிய உறுப்பு மாற்று சிகிச்சைகளுக்கு குறைந்தது 16 லட்சத்தில் இருந்து 30 லட்சம் வரை ஆகிறது. இதனால் இத்தகைய சிகிச்சை என்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. இந்நிலையில், சிகிச்சைக்கு பணமின்றி, தவிக்கும் நோயாளிகள் பற்றிய விபரங்களை வெளியிட்டு உலக அளவில் நிதி திரட்டி அவர்களுக்கு அளிக்கும் மகத்தான சேவையை மிலாப் என்ற பொது நிதி திரட்டல் தளம் செயல்பட்டு வருவதாக மருத்துவரும் கல்லீரல் சிகிச்சை நிபுணருமான டாக்டர் முகமது ரேலா தெரிவித்தார். இந்த வலைதளம் மூலமாக குரோம்பேட்டையில் உள்ள டாக்டர் ரேலா இன்ஸ்ட்டிட்யூட் மருத்துவமனையில்100 அறுவை சிகிச்சைகளுக்கு 5 கோடி ரூபாய் வரை நிதி திரட்டி கொடுத்து 100 நோயாளிகள் பயன்பெற்றுள்ளதாக கூறிய அவர், இந்த வாய்ப்பை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்