அ.தி.மு.க. மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் - ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் தலைமையில் ஆலோசனை

அதிமுக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றுவருகிறது.
அ.தி.மு.க. மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் - ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் தலைமையில் ஆலோசனை
x
அதிமுக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றுவருகிறது. ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று தொடங்கி 13ஆம் தேதி வரை இந்த கூட்டம் நடைபெறுகிறது. முதல்நாளில்14 மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில், மூத்த அமைச்சர்களும் கலந்து கொண்டுள்ளனர். இதில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்