தைப்பூசத்தையொட்டி ஜல்லிக்கட்டு விழா - 800 காளைகள் 200 வீரர்கள் பங்கேற்பு

அரியலூர் மாவட்டம் கீழக்கொளத்தூரில் தைப்பூச விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தைப்பூசத்தையொட்டி ஜல்லிக்கட்டு விழா - 800 காளைகள் 200 வீரர்கள் பங்கேற்பு
x
அரியலூர் மாவட்டம் கீழக்கொளத்தூரில் தைப்பூச விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசு கொறடா ராஜேந்திரன் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். மாவட்டத்தின் பல இடங்களில் இருந்து 800 காளைகள், 200 மாடுபிடி வீரர்கள் களம் இறங்கியுள்ளனர். வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்த வலிமையான காளைகளை, அங்கு குவிந்திருந்த மாடுபிடி வீரர்கள் அடக்கி வருகின்றனர். போட்டியை பார்க்க திரண்ட ஊர்மக்கள், கைதட்டி, விசில் அடித்து, ஆரவாரம் செய்து வீரர்களை உற்சாகப்படுத்துகிறார்கள். 

Next Story

மேலும் செய்திகள்