5, 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்துக்கு காரணம் சட்டமன்ற தேர்தலா? - பரபரப்பு பின்னணி தகவல்கள்

அடுத்த ஆண்டு நடைபெற உள்ளி சட்டமன்ற தேர்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கருத்தில் கொண்டே ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அரசாணை ரத்து செய்யப்பட்டிருக்கலாம் என்று ஒரு கருத்து நிலவுகிறது . ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து குறித்த காரணங்களை அலசுல்.
5, 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்துக்கு காரணம் சட்டமன்ற தேர்தலா? - பரபரப்பு பின்னணி தகவல்கள்
x
 கடந்த  ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி, 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தும் அரசாணை வெளியானது.  அனைத்து தரப்பிலும் அன்று தொடங்கிய எதிர்ப்பு இன்று வரை பல்வேறு கட்ட போராட்டங்களாக தொடர்கிறது... எதிர்ப்புகள் வலுத்து வந்தாலும் , எடுத்த முடிவை நடைமுறைப்படுத்துவதில்  தமிழக கல்வித்துறை தீவிரமாக இருந்தது.

மாணவர்களின் அறிவுத்திறனை சோதிப்பதற்காக மட்டுமே தேர்வு நடத்தப்படுகிறது என்றும், மாணவர்களும் பெற்றோர்களும்  அச்சப்பட வேண்டாம் என்று  கல்வித்துறை தொடர்ந்து விளக்கம் அளித்து வந்தது.

இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பொதுத்தேர்வு ரத்து அறிவிப்பை வெளியிட்ட தோடு, செப்டம்பர் 13 ஆம் தேதி வெளியிட்ட அரசாணை ரத்து என்றும், பழைய நிலையே தொடரும் எனவும் அறிவித்துள்ளார்.

இதனை கல்வியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ள நிலையில், அதற்கு   சில காரணங்களை பட்டியலிடுகிறார்கள்  அரசியல் நோக்கர்கள்.

முதலாவது, 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை யாருமே ஏற்றுக்கொள்ளாமல் ,  எதிர்க்கும் போது  ஏன் செயல்படுத்த வேண்டும் என  சமீபத்தில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

இந்த பொதுத்தேர்வு விவகாரம் அதிமுகவுக்கு , சட்டமன்ற தேர்தலின் போது பின்னடைவை ஏற்படுத்தக் கூடும் என்று முதலமைச்சர் அப்போது சுட்டிக்காட்டியதும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்