பா.ஜ.க. கூட்டத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கோஷம் - அ.தி.மு.க. பிரமுகருக்கு அடி உதை

பா.ஜ.க. கூட்டத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கோஷம் எழுப்பிய அ.தி.மு.க. பிரமுகரை, பா.ஜ.க.வினர் அடித்து உதைத்ததால் பரபரப்பு உருவானது.
x
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டையில் பா.ஜ.க. சார்பில் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து நேற்று பொதுக் கூட்டம் நடைபெற்றது.  பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் நரேந்திரன், மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பேசினர். அப்போது அங்கு வந்த திருச்சி தொட்டியம் பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் ராஜா என்பவர் குடிபோதையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மோடியா அல்லது லேடியா என கோஷங்களை எழுப்பியுள்ளார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.  ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பா.ஜ.க. தொண்டர்கள் குடியுரிமை சட்டத்தை எதிர்த்த ராஜாவை சரமாரியாக அடித்து உதைத்தனர். அங்கு இருந்த  போலீஸார்  ராஜாவை பாஜக தொண்டர்களிடம் இருந்து காப்பாற்றி அழைத்து சென்றனர். 


Next Story

மேலும் செய்திகள்