"தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணியை அனுமதிக்க கூடாது" - ஸ்டாலின்

குடியுரிமை திருத்த சட்டம் உள்பட மூன்று சட்டங்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்த தி.மு.க தோழமை கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
x
சென்னை அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில், கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்பட 11 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மத அடிப்படையில் மக்களை பிளவுப்படுத்தும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்,  தேசியக் குடிமக்கள் பதிவேடுக்கு வழிகோலும் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு தயாரிப்பதை நிறுத்த வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பிப்ரவரி 2ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்த தி.மு.க தோழமை கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்