வன காவலர் பணிக்கு மலைவாழ் பெண்கள் தேர்வு : மாவட்ட ஆட்சியர் ஷில்பா வாழ்த்து

நெல்லை மாவட்டம் பாபநாசம் மலைப்பகுதிகளில் வாழும் மலைவாழ் சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள், வனத்துறை பணிக்கு தேர்வாகியுள்ளனர்.
x
நெல்லை மாவட்டம் பாபநாசம் மலைப்பகுதிகளில் வாழும் மலைவாழ் சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள், வனத்துறை பணிக்கு தேர்வாகியுள்ளனர். வனத்துறையில் காலியாக இருந்த 527 வனகாவலர் பணியிடங்களுக்கு  ஆன்-லைன் மூலம் எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. இதில் மலை வாழ் மக்களுக்கு 99 இடம் ஒதுக்கப்பட்டது.  இதற்காக, பாபநாசம் மலைப்பகுதிகளில் வசித்து வரும் படித்த இளைஞர்கள், பெண்கள் தேர்வு செய்யப்பட்டு, மாவட்ட நிர்வாகம் பயிற்சி வழங்கியது. இதில் 6 பேர் வெற்றிபெற்று நேர்முகத்தேர்வு வரை சென்ற நிலையில், 2 பெண்கள் வனக்காவலர் பணிக்கு தேர்வாகி  பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. அம்பாசமுத்திரம் வன சரக பகுதியில், அவர்களுக்கு பணிநியமனம் கிடைத்துள்ளது. நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீசை நேரில சந்தித்து, இந்த பெண்கள் வாழ்த்து பெற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்