"முதலமைச்சராகவே இருந்து மறைந்தவர்கள் வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள்" - அமைச்சர் கடம்பூர் ராஜூ

அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய 3 பேர் மட்டுமே, வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
முதலமைச்சராகவே இருந்து மறைந்தவர்கள் வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள் - அமைச்சர் கடம்பூர் ராஜூ
x
அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய 3 பேர் மட்டுமே, வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், இந்த 3 பேர் மட்டுமே முதலமைச்சராகவே இருந்து முதலமைச்சராகவே மறைந்தவர்கள் என்ற பெருமைக்குரியவர்கள் என குறிப்பிட்டார். அண்ணாவின் கொள்கைகளை கருணாநிதி மறந்தவர் என்றும்,  ஆனால் அண்ணாவின் பெயரில் கட்சியை தொடங்கி, அவரது படத்தையும் கொடியில் பதித்தவர் எம்.ஜி.ஆர் தான் என, இந்த நிகழ்ச்சியில் பேசிய கே.பி.முனுசாமி கூறினார்.  தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் செல்லபாண்டியன், சண்முகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்