​டாப்சிலிப்பில் பயிற்சி யானைகளுடன் பொங்கல் விழா - செல்பி, புகைப்படம் எடுக்க மக்கள் ஆர்வம்

​டாப்சிலிப்பில் பயிற்சி யானைகளுடன் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட சின்னதம்பி யானையும் முகாமில் தலைப் பொங்கல் கொண்டாடியது.
x
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள டாப்-சிலிப் முகாமில்,  ஆண்டுதோறும் பொங்கல் விழா கொண்டாடப்படுவது வழக்கம்.  அதே போன்று, இந்த ஆண்டும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.  கோழிகமுத்தி யானைகள் முகாமிலிருந்து 18 யானைகள் வரவழைக்கப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.  

கூடுதல் சிறப்பாக, திருப்பூர் மாவட்டம் மடத்துகுளம் பகுதியில் கடந்த ஆண்டு, மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட சின்னதம்பி யானையும்,  டாப்சிலிப் முகாமில்,  தலைப் பொங்கலை கொண்டாடியது.  சின்னதம்பியுடன் சுற்றுலாபயணிகள்,  செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

யானைகளுக்கு கரும்பு, பழங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இந்த விழாவில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கலந்து கொண்டனர். 

காணும் பொங்கலை கொண்டாட டாப்சிலிப்பிற்கு வந்த நிலையில், யானைகளுடன் பொங்கல் கொண்டாடியது மகிழ்ச்சியளிப்பதாக பொதுமக்களும், சுற்றுலாபயணிகளும் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்