நெல்லை கண்ணனுடன் நல்லக்கண்ணு, வேல்முருகன் சந்திப்பு

பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் குறித்த சர்ச்சை பேச்சு விவகாரத்தில் கைதாகி ஜாமினில் வெளியே வந்துள்ள பேச்சாளர் நெல்லை கண்ணனை, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
நெல்லை கண்ணனுடன் நல்லக்கண்ணு, வேல்முருகன் சந்திப்பு
x
பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் குறித்த சர்ச்சை பேச்சு விவகாரத்தில் கைதாகி ஜாமினில் வெளியே வந்துள்ள பேச்சாளர் நெல்லை கண்ணனை, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நல்லக்கண்ணு, நெல்லை கண்ணன் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளை, தமிழக அரசு திரும்ப பெற வேண்டுமென கோரிக்கை விடுத்தார். மேலும், தமிழக அரசு குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்து விட்டு, இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டுமென என பேசுவது போலியானது என தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்