வெற்று புகழ்ச்சி கொண்ட ஆளுநர் உரை - திமுக தலைவர் ஸ்டாலின்
வெற்று புகழ்ச்சிகளையும், வீண் பாராட்டுரைகளையும் கொண்ட கொண்ட காகித கட்டாக ஆளுநர் உரை இருந்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பிரச்னைகளை புறந்தள்ளிவிட்டு, ஆளும் தரப்பு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் படித்ததால், திமுக வெளிநடப்பு செய்ததாக தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுமாறு திமுக வலியுறுத்திய நிலையில் பேரவை தலைவர் எந்த பதிலும் அளிக்கவில்லை எனவும் தீர்மானம் குறித்து பேசியபோது, அமைச்சர்கள் குறுக்கீடு செய்ததில் இருந்து, தீர்மானம் நிறைவேற்றும் எண்ணம் அ.தி.மு.க. ஆட்சிக்கு இல்லை என உணர முடிந்ததாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக எம்எல்ஏ அன்பழகன் கூறியவற்றை மரபுகளை மீறியதாக குறிப்பிட்ட சபாநாயகர், அதே வார்த்தையை அமைச்சர் கூறியபோது நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தங்கள் பக்க நியாயத்தையும் சொல்ல முடியாமல், எதிர்க் கட்சி மீது விமர்சனமும் வைக்க முடியாமல், தடுமாறும் பரிதாபம் அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
Next Story

