அடுத்த தமிழக பா.ஜ.க தலைவர் யார்? - மாநில நிர்வாகிகளிடம் கருத்து கேட்க சென்னை வரும் மேலிடப் பார்வையாளர்

தமிழக பா.ஜ.கவின் புதிய தலைவர் தேர்வு குறித்து மாநில நிர்வாகிகளின் கருத்துகளை கேட்பதற்காக மேலிடப் பார்வையாளர் ஜெயபிரகாஷ் இன்று சென்னை வருகிறார்.
அடுத்த தமிழக பா.ஜ.க தலைவர் யார்? - மாநில நிர்வாகிகளிடம் கருத்து கேட்க சென்னை வரும் மேலிடப் பார்வையாளர்
x
தமிழக பா.ஜ.க தலைவராக இருந்த தமிழிசை, கடந்த ஆகஸ்ட் மாதம் தெலங்கானா ஆளுநராக பொறுப்பேற்றார். இதையடுத்து,கடந்த மூன்று மாதங்களாக மாநில தலைமை இன்றி பா.ஜ.க இயங்கி வருகிறது. இந்நிலையில், தமிழக பா.ஜ.கவின் அடுத்த தலைவர் தேர்வு குறித்து மாநில நிர்வாகிகளின் கருத்துகளை கேட்பதற்காக மேலிடப் பார்வையாளர் ஜெயபிரகாஷ் இன்று சென்னை வருகிறார். தியாகராயநகர் கமலாலயத்தில் நடக்க உள்ள கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்கின்றனர். நிர்வாகிகள் கூட்டத்தில் பெறப்படும் கருத்துக்களை ஜெயபிரகாஷ் தேசிய தலைமைக்கு அறிக்கையாக அளிப்பார். அதன் பின்பு சில நாட்களிளேயே தமிழக பாஜகவின் புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 



Next Story

மேலும் செய்திகள்