ஊரக உள்ளாட்சி தேர்தல் வெற்றி நிலவரம்

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், அதிமுக மற்றும் திமுக கூட்டணிக்கு இடையே நூல் இழை அளவில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
x
ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை தொடங்கி இன்று வரை எண்ணப்பட்டு வருகிறது. 21 மாவட்டங்களில் முடிவுகள் வெளியான நிலையில், தற்போதைய வெற்றி நிலவரத்தை பார்க்கலாம்... 
 
ஒட்டு மொத்தமாக 515 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில், அதிமுக கூட்டணி 243 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. திமுக கூட்டணி 268 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மற்றவை 2 இடங்களில் வென்றுள்ள நிலையில் இன்னும் 2 இடங்களுக்கு முடிவுகள் அறிவிக்க வேண்டி உள்ளது.

இதேபோல் 5 ஆயிரத்து 90 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், அதிமுக கூட்டணி 2182 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. திமுக கூட்டணி 2346 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. மற்றவை 558 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளை கைப்பற்றியுள்ளது. மீதமுள்ள இடங்களுக்கு முடிவுகள் அறிவிக்க வேண்டி உள்ளது.

அரியலூர் மாவட்ட கவுன்சிலர் தேர்தலில், அதிமுக 11 இடங்களிலும், திமுக ஒரு இடத்திலும் வெற்றிபெற்றுள்ளது. அரியலூர் ஒன்றிய கவுன்சிலர் போட்டியில், 56 இடங்களை அதிமுகவும், 46 இடங்களை திமுகவும் கைப்பற்றி உள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்ட கவுன்சிலர் தேர்தலில், 8 இடங்களில் அதிமுகவும், 15 இடங்களில் திமுகவும் வென்றுள்ளன. கிருஷ்ணகிரி ஒன்றிய கவுன்சிலருக்கான போட்டியில், 83 இடங்களில் அதிமுகவும், 111 இடங்களில் திமுகவும் வெற்றி பெற்றுள்ளன. 

நாமக்கல்லில் மாவட்ட கவுன்சிலர் தேர்தலில், 13 இடங்களை அதிமுகவும், 4 இடங்களை திமுகவும் கைப்பற்றி உள்ளன. நாமக்கல் ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில், 100 இடங்களில் அதிமுகவும், 64 இடங்களில் திமுகவும் வென்றுள்ளன.

பெரம்பலூர் மாவட்ட கவுன்சிலர் தேர்தலில், அதிமுக ஒரு இடத்திலும், திமுக 7 இடங்களிலும் வென்றன. பெரம்பலூர் ஒன்றிய கவுன்சிலர் முடிவுகளில், 28 இடங்களில் அதிமுகவும், 42 இடங்களில் திமுகவும் வெற்றி பெற்றன.

தஞ்சை மாவட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் தேர்தலில், 5 இடங்களில் அதிமுகவும், 23 இடங்களில் திமுகவும் வாகை சூடியுள்ளது. தஞ்சை ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கான போட்டியில், அதிமுக 89 இடங்களையும், திமுக 165 இடங்களையும் பிடித்து வெற்றிபெற்றுள்ளன.
  
திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் அதிமுக 9 இடங்களிலும், திமுக 24 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. திருவண்ணாமலை ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அதிமுக 147 இடங்களிலும், திமுக 152 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

நாகை மாவட்டத்தில் மாவட்ட கவுன்சிலருக்கான தேர்தலில் அதிமுக 6 இடங்களையும், திமுக 15  இடங்களையும் கைப்பற்றியுள்ளன. நாகை மாவட்டத்தில், ஒன்றிய கவுன்சிலருக்கான போட்டியில், அதிமுக 82 இடங்களையும், திமுக 112 இடங்களையும் பிடித்துள்ளன.

விருதுநகர் மாவடத்தில் மாவட்ட கவுன்சிலர் போட்டியில் அதிமுக சார்பில் 13 பேரும், திமுக சார்பில் 7 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் , ஒன்றிய கவுன்சிலருக்கான போட்டியில் 83 இடங்களில் அதிமுகவும், திமுக 104 இடங்களிலும் வென்றுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில், மாவட்ட கவுன்சிலருக்கான தேர்தலில் அதிமுக 7 இடங்களிலும், திமுக 16 இடங்களிலும் வெற்றிவாகை சூடியுள்ளது. திண்டுக்கல் மாவட்ட ஒன்றிய கவுன்சிலருக்கான தேர்தலில் அதிமுக 85 இடங்களையும், திமுக 126 இடங்களையும் வென்றுள்ளன.

திருச்சி மாவட்டத்தில் அதிமுக சார்பில் 5 மாவட்ட கவுன்சிலர் வெற்றி பெற்றுள்ளனர், திமுக சார்பில் 19 மாவட்ட கவுன்சிலர்கள் வெற்றி பெற்றுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்களுக்கான போட்டியில் அதிமுக சார்பில், 62 பேரும், திமுக சார்பில் 152 பேரும் வெற்றி வாகை சூடியுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில்  மாவட்ட கவுன்சிலர் இடங்களை அதிமுக சார்பில் 15 பேரும், திமுக சார்பில் 14  பேரும் வென்றுள்ளனர். கடலூர் மாவட்ட ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு அதிமுகவில் இருந்து 151 பேரும், திமுகவில் இருந்து 87 பேரும் வெற்றிபெற்றுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களுக்கான போட்டியில் அதிமுக 9 இடங்களிலும், திமுக 13 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. மதுரை மாவட்ட ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் அதிமுக 93 இடங்களையும், திமுக 97 இடங்களையும் வென்றுள்ளன.

கரூர் மாவட்டத்தில், மாவட்ட கவுன்சிலருக்கான போட்டியில், 9 இடங்களில் அதிமுகவும், 3 இடங்களில் திமுகவும் வெற்றி பெற்றுள்ளன. கரூர் ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில், அதிமுக 70 இடங்களிலும், திமுக 37 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

திருப்பூர் மாவட்டத்தில் மாவட்ட கவுன்சிலருக்கான போட்டியில், 13 இடங்களில் அதிமுகவும், 4 இடங்களில் திமுகவும் வெற்றிபெற்று உள்ளன. திருப்பூர் மாவட்டத்தில், ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில், அதிமுக 64 இடங்களிலும், திமுக 88 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

புதுக்கோட்டை மாவட்டத்தில், மாவட்ட கவுன்சிலருக்கான போட்டியில், 9 இடங்களில் அதிமுகவும், 13 இடங்களில் திமுகவும் வெற்றிபெற்று உள்ளன. புதுக்கோட்டை மாவட்ட ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில், அதிமுக 72  இடங்களிலும், திமுக 131  இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தில், மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களுக்கான போட்டியில் அதிமுக 6 இடங்களை கைப்பற்றியது. திமுக 5 இடத்தில் வெற்றிபெற்றது. கன்னியாகுமரி மாவட்ட ஒன்றிய கவுன்சிலர்களுக்கான தேர்தலில் அதிமுக 47 இடங்களிலும், திமுக 52 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில், மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் அதிமுக 10 இடங்களிலும், திமுக 7 இடங்களிலும் வெற்றி வாகை சூடியுள்ளது. தர்மபுரி மாவட்ட ஒன்றிய கவுன்சிலர் போட்டியில், அதிமுக 103 இடங்களிலும், திமுக 55 இடங்களிலும் வெற்றி வாகை சூடியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் போட்டியில் அதிமுக 23 இடத்தையும், திமுக 5 இடத்தையும் கைப்பற்றியுள்ளது. சேலம் மாவட்ட ஒன்றிய கவுன்சிலர் போட்டியில் அதிமுக 176 இடங்களையும், திமுக 83 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் போட்டியில் அதிமுக 15 இடங்களிலும்,  திமுக 4 இடங்களிலும் வெற்றி வாகை சூடியுள்ளது. ஈரோடு மாவட்ட ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் அதிமுக 93 இடங்களையும், திமுக 67 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. 

நீலகிரி மாவட்டத்தில், மாவட்ட கவுன்சிலர் போட்டியில் அதிமுக ஒரு இடத்திலும், திமுக 5 இடத்தையும் கைப்பற்றியுள்ளது. நீலகிரி மாவட்ட ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் அதிமுக 16 இடங்களையும், திமுக 37 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.

திருவாரூர்  மாவட்டத்தில், மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் அதிமுக 3 இடங்களையும், திமுக 14 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. திருவாரூர் மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர் போட்டியில் அதிமுக 63 இடங்களையும், திமுக 97 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.

தேனி மாவட்டத்தில், மாவட்ட கவுன்சிலர் போட்டியில் அதிமுக 8 இடங்களையும், திமுக 2 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. தேனி மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர் போட்டியில் அதிமுக 50 இடங்களையும், திமுக 41 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில், மாவட்ட கவுன்சிலர் போட்டியில் அதிமுக 12  இடங்களிலும், திமுக 5 இடங்களிலும்  வெற்றி வாகை சூடியுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில், ஒன்றிய கவுன்சிலர் போட்டியில் அதிமுக 67 இடங்களையும், திமுக 72 இடங்களையும் வென்றுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில், மாவட்ட கவுன்சிலருக்கான போட்டியில் அதிமுக 5 இடங்களிலும், திமுக 12 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அதிமுக 54 இடங்களிலும், திமுக 86 இடங்களிலும் வெற்றி வாகை சூடியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில், மாவட்ட கவுன்சிலர் போட்டியில் அதிமுக சார்பில் 9 பேரும்,  திமுக சார்பில் 7 பேரும் வெற்றி வாகை சூடியுள்ளனர். சிவகங்கை மாவட்ட ஒன்றிய கவுன்சிலர் போட்டியில் அதிமுக சார்பில் 67 பேரும், திமுக சார்பில் 76 பேரும் வெற்றி வாகை சூடியுள்ளனர்.

கோவை மாவட்டத்தில், மாவட்ட கவுன்சிலராக  அதிமுகவில் இருந்து 12 பேரும்,  திமுகவில் இருந்து  5 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில், ஒன்றிய கவுன்சிலராக அதிமுகவில் இருந்து 91 பேரும், திமுகவில் இருந்து  56 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

திருவள்ளூர் மாவட்டத்தில், மாவட்ட கவுன்சிலர் போட்டியில் அதிமுக சார்பில் 6 பேரும், திமுக சார்பில் 18 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்ட  ஒன்றிய கவுன்சிலர் போட்டியில் அதிமுக சார்பில் 90 பேரும், திமுக சார்பில் 110 பேரும் தேர்வாகியுள்ளனர்.

அரியலூர் மாவட்ட கவுன்சிலர் தேர்தலில், அதிமுக 11 இடங்களிலும், திமுக ஒரு இடத்திலும் வெற்றிபெற்றுள்ளது. அரியலூர் மாவட்ட ஒன்றிய கவுன்சிலர் போட்டியில், 56 இடங்களை அதிமுகவும், 46 இடங்களை திமுகவும் கைப்பற்றி உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்