குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு - தி.மு.க கூட்டணி கட்சிகள் பிரமாண்ட பேரணி

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் இணைந்து சென்னையில் கண்டன பேரணியில் ஈடுபட்டன.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு - தி.மு.க கூட்டணி கட்சிகள் பிரமாண்ட பேரணி
x
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு, தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு, திரும்பப்பெற வலியுறுத்தி, தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் சென்னையில் பேரணி நடத்தப்பட்டது. அதன்படி சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகையில் காலை 9 மணி முதலே தி.மு.க கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் குவிந்தனர். சரியாக 10 மணிக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் வந்ததும் பேரணி தொடங்கியது. இதில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வாசகங்கள் பொறித்த பதாகைகளை கையில் ஏந்தியபடி, கட்சி தலைவர்கள் ஊர்வலமாக சென்றனர்.  கூவம் கரையை ஒட்டியுள்ள லேங்ஸ் கார்டன் சாலை, புதுப்பேட்டை சாலை வழியாக ராஜரத்தினம் விளையாட்டு அரங்கு அருகே 11.20 மணிக்கு பேரணி நிறைவடைந்தது. 
 



Next Story

மேலும் செய்திகள்