திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு : வீட்டில் கருப்பு கொடியேற்றிய இஸ்லாமிய பெண்கள்

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை கோட்டைமேடு பகுதியில் வீட்டில் கருப்பு கொடிகளை ஏற்றி இஸ்லாமிய பெண்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு : வீட்டில் கருப்பு கொடியேற்றிய இஸ்லாமிய பெண்கள்
x
அண்மையில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்திற்கு இஸ்லாமிய அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளது. இதனிடையே  கோட்டைமேடு, கரும்புக்கடை, குனியமுத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாமியர்கள் இரவு முதலே வீடுகளில் கருப்பு கொடியை ஏற்றி தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். இது குறித்து  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்,  கறுப்புக் கொடி கட்டுவதை தடுக்க முயன்றதால் வாக்குவாதம் ஏற்ப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான நிலை நீடித்தது.


Next Story

மேலும் செய்திகள்