"எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்த பாஜகவுக்கு நன்றி" - உதயநிதி ஸ்டாலின்

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் வரை திமுக போராட்டத்தை தொடரும் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
x
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் வரை திமுக போராட்டத்தை தொடரும் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்  தெரிவித்துள்ளார். திமுக பொதுச்செயலாளர், க.அன்பழகனின் பிறந்த நாளை ஒட்டி, அவரை நேரில் சந்தித்து உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்த பாஜகவுக்கு நன்றி என்றார். எதிர்ப்பு குரல் எழுப்பி போராட்டம் நடத்தும் மாணவர்கள் கைது செய்யப்படுவதை கண்டிப்பதாக உதயநிதி ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்