சொத்தை எழுதி வாங்கி கொண்டு தந்தையை கைவிட்ட மகன் - சொத்துக்களை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த சார் ஆட்சியர்

சொத்துக்களை எழுதி வாங்கி விட்டு தந்தையை கைவிட்ட மகனிடமிருந்து சொத்துக்களை மீட்ட நெல்லை சார் ஆட்சியர் அதை பெற்றோரிடம் ஒப்படைத்தார்.
சொத்தை எழுதி வாங்கி கொண்டு தந்தையை கைவிட்ட மகன் - சொத்துக்களை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த சார் ஆட்சியர்
x
நெல்லை பாளையங்கோட்டை சேர்ந்த பூதத்தான் என்பவருக்கு மகாலிங்கம், முருகன் என்ற இரண்டு மகன்களும் செல்வி என்ற மகளும் உள்ளனர். முருகன் தன் தந்தையை பார்த்து கொள்வதாக கூறி, உடன் பிறந்தவர்களின் ஒப்புதலுடன், 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டை எழுதி வாங்கியுள்ளார். ஆனால் சொத்துக்கள் கையில் கிடைத்தவுடன் பூதத்தானை வீட்டை விட்டு முருகன் வெளியேற்றி உள்ளார். 

இதை அறிந்த பூதத்தானின் மற்றொரு மகன் மகாலிங்கம், முருகனுடன் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகனின் குடும்பம், பூதத்தான் மற்றும் மகாலிங்கத்தை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதையடுத்து மகாலிங்கம் மற்றும் மகள் செல்வி இணைந்து, இது குறித்து புகார் அளித்துள்ளனர். 

இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், நெல்லை சார் ஆட்சியர் மணிஷ் நாராணவரேக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, முருகன் மீது பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டம் 2007இன் கீழ் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்ட மணிஷ், முருகனிடம் இருந்து சொத்துக்களை மீட்டு, பூதத்தானிடம் ஒப்படைத்தார். 

Next Story

மேலும் செய்திகள்