சிலை கடத்தல் தொடர்புடைய அனைத்து ஆவணங்களை ஒப்படைத்து விட்டேன் - பொன்.மாணிக்கவேல்

சிலை கடத்தல் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும், ஏடிஜிபியிடம் ஒப்படைத்து விட்டதாக, பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
x
பொன் மாணிக்கவேலுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு,  உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில், சிலை கடத்தல் தொடர்புடைய  17 ஆயிரத்து 790 பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் அனைத்தையும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியிடம் ஒப்படைத்து விட்டதாக பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார். ஆனாலும் தமக்கு எதிராக தாக்கல் செய்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களை அறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஆவணங்களை ஒப்படைப்பதற்கு உரிய கால அவகாசத்தை வழங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். தீய நோக்கத்துடனும் நியாயமற்ற முறையிலும், அலைக்கழிக்கும் நோக்கத்தில் அவசரஅவசரமாக  உச்ச நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளார். பொன் மாணிக்கவேல் சார்பில் தமிழக அரசு வழக்கறிஞர்களிடம் அளிக்கப்பட்டுள்ள பிரமாணப் பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் நாளை தாக்கல் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்