சூடான் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட இருவர் சென்னை திரும்பினர்

சூடான் நாட்டில் சொராமிக் தொழிற்சாலையில் கடந்த வாரம் நடந்த தீ விபத்தில் தமிழகத்தை சேர்ந்த முகமது சலீம் மற்றும் பூபாலன் ஆகியோர் காயம் அடைந்தனர்.
x
சூடான் நாட்டில்  சொராமிக் தொழிற்சாலையில் கடந்த வாரம் நடந்த தீ விபத்தில் தமிழகத்தை சேர்ந்த முகமது சலீம் மற்றும் பூபாலன் ஆகியோர் காயம் அடைந்தனர். இதனையடுத்து சூடான் நாட்டில் சிகிச்சை பெற்று வந்த இருவரும் சென்னை திரும்பினர். விமானம் மூலம் சென்னை வந்த இருவரையும் தமிழக அரசின் அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழர்கள் நல ஆணையக அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் கடலூரை சேர்ந்த சலீம் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பூபாலன் அவரது சொந்த ஊரான திருவாரூருக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Next Story

மேலும் செய்திகள்