வைகை அணையிலிருந்து பாசனத்துக்கு 300 கனஅடி நீர் மட்டுமே திறப்பு

வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், பாசனத்துக்கான நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
வைகை அணையிலிருந்து பாசனத்துக்கு 300 கனஅடி நீர் மட்டுமே திறப்பு
x
வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், பாசனத்துக்கான நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாசனத்துக்கு இரண்டாயிரத்து 60 கனஅடி நீர், திறக்கப்பட்டதால், அணை நிரம்புவதில் தாமதம் ஏற்படும் நிலை இருந்தது. இந்நிலையில், தொடர்ந்து மழை பெய்து வருவதால், பாசனத்துக்கான நீரின் அளவு, 300 அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அறுபத்து நான்கரை அடி தண்ணீர் உள்ள வைகை அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில், வெளியேற்றம் குறைக்கப்பட்டுள்ளதால், விரைவில் முழுக் கொள்ளளவான 71 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Next Story

மேலும் செய்திகள்