ஹெச்.ராஜா குடும்பத்தினருக்கு மு.க.அழகிரி நேரில் வாழ்த்து

பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச். ராஜாவின் இளைய மகள் திருமணம், காரைக்குடியில் வரும் 15ஆம் தேதி நடைபெறுவதை ஒட்டி, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
x
பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச். ராஜாவின் இளைய மகள் திருமணம், காரைக்குடியில் வரும் 15ஆம் தேதி நடைபெறுவதை ஒட்டி, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருமண நாள் அன்று வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், முன்னதாகவே வந்து வாழ்த்து தெரிவித்ததாக கூறினார். தொடர்ந்து, திமுக இளைஞரணி நிர்வாகிகள் நியமனம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மு.க.அழகிரி, தான் திமுகவிலேயே இல்லை என்றும், தன்னிடம் ஏன் இதுகுறித்து கேள்வி கேட்கிறீர்கள் ? என்றும் எதிர்க்கேள்வி எழுப்பினார்.

Next Story

மேலும் செய்திகள்