நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டால் டிஜிபியே பொறுப்பு": சிலைக்கடத்தல் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

சிலைக்கடத்தல் வழக்கில் நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டால் அதற்கு டிஜிபியே பொறுப்பு என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
x
தமிழக அரசுக்கு எதிராக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் சிலை கடத்தல் பிரிவு அதிகாரிகளுக்கு எதிராகவே நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், வழக்கு விசாரணைக்கு இந்து சமய அறநிலையத்துறையோ, பிற துறைகளோ ஒத்துழைப்பு வழங்குவதில்லை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த வழக்கு தொடர்பான ஆதாரங்களை மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள்,  விசாரணையை நவம்பர் 12 ஆம் தேதிக்கு  தள்ளி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்