"ஹைட்ரோ கார்பன் திட்டங்களை இந்தியா கைவிட வேண்டும்":பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை

நில நடுக்க அபாயம் உள்ளதால் மீத்தேன் உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு இங்கிலாந்து தடை விதித்துள்ளதை போல, இந்தியாவும் அந்த திட்டங்களை கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்
ஹைட்ரோ கார்பன் திட்டங்களை இந்தியா கைவிட வேண்டும்:பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை
x
நில நடுக்க அபாயம் உள்ளதால் மீத்தேன் உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு இங்கிலாந்து தடை விதித்துள்ளதை போல, இந்தியாவும் அந்த திட்டங்களை கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இங்கிலாந்து தடை விதிப்பதற்கு முன்பாகவே பிரான்ஸ், ஜெர்மனி,  ஸ்காட்லாந்து உள்ளிட்ட நாடுகளில் ஹைட்ரோ கார்பனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி உள்ள அவர், ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால், தமிழகத்தில் நில நடுக்கம் ஏற்படுவதையும், காலப் போக்கில் பாலைவனமாக மாறுவதையும் தடுக்க முடியாது என எச்சரித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்