கடலுக்குள் சென்றபின் புயல் எச்சரிக்கை : மீன்பிடிக்கச் சென்ற 7 விசைப்படகுகள் திரும்பவில்லை

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிக்கச் சென்ற 7 விசைப்படகு மீனவர்கள் கரை திரும்பாததால் மீனவ மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
x
கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூர், வல்லவிளை பகுதிகளில் இருந்து கடந்த 16 ஆம் தேதி 500 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அதன் பின்னர்  லட்சத்தீவு பகுதியில் அடுத்தடுத்து  இரண்டு புயல்கள் உருவானதால் கடலுக்குள் சென்ற மீனவர்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதையடுத்து மீனவர்கள் பல்வேறு இடங்களில் கரை திரும்பிய நிலையில், இதுவரை 8 படகுகள் கரை திரும்பவில்லை. இந்த நிலையில், வல்லவிளையில் நடைபெற்ற விசைப்படகு உரிமையாளர்கள் கூட்டத்தில், கரை திரும்பாத மீனவர்களை 40 படகுகளில் சென்று தேடும் பணியை  மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 20 படகுகளுக்கு அரசு எரிபொருள் மானியம் அளிக்க வேண்டும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாருக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்