மருத்துவமனை திறப்பு விழாவில் முதலமைச்சர், ஜெயலலிதா படங்களை வைக்காதது ஏன்? - அதிமுகவினர் வாக்குவாதம்

சென்னை செங்குன்றம் அடுத்த புழலில், முதலமைச்சர் படம் வைக்காததைக் கண்டித்து மருத்துவர்களுடன் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
x
புழலில் 7 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட, நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையை முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். 100 படுக்கை வசதி, உள் மற்றும் புற நோயாளிகள் பிரிவு, பொது மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை வசதிகளுடன் மருத்துவமனை திறக்கப்பட்டது. இந்த மருத்துவமனையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மறைந்த ஜெயலலிதா ஆகியோரது படங்களை வைக்காதது குறித்து மருத்துவர்களுடன், அதிமுகவினர் தகராறில் ஈடுபட்டனர். உடனடியாக முதலமைச்சர் படத்தை வைக்க நடவடிக்கை எடுப்பதாக மருத்துவர்கள் கூறியும், தொடர்ந்து வாக்குவாதம் செய்ததால், பரபரப்பு நிலவியது. 


Next Story

மேலும் செய்திகள்