வருகிற 10-ஆம் தேதி தி.மு.க. பொதுக்குழு கூட்டம்

தி.மு.க. பொதுக்குழு கூட்டம் வருகிற 10-ஆம் தேதி சென்னையில் கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.
வருகிற 10-ஆம் தேதி தி.மு.க. பொதுக்குழு கூட்டம்
x
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வருடத்துக்கு ஒருமுறை பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்பது விதியாகும். அந்த அடிப்படையில் தி.மு.க. பொதுக்குழுவை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கடந்த 6-ஆம் தேதி கூட்டுவதாக பொதுச்செயலாளர் க.அன்பழகன் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தார். ஆனால் நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்ததால் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், தி.மு.க. பொதுக்குழு கூட்டம், வருகிற 10-ந்தேதி ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் நடைபெற இருப்பதால் அதுகுறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்