மருத்துவர்கள் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் -சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தல்

சம்பள உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
மருத்துவர்கள் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் -சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தல்
x
தகுதிக்கேற்ற சம்பளம், பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கு 50 சதவீத  இட ஒதுக்கீடு, பணியிடக் கலந்தாய்வு உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதை நிறைவேற்றி தருவதாக தமிழக சுகாதாரத்துறை எழுத்துப்பூர்வமாக வாக்குறுதி அளித்தது. ஆனால், இதுவரை வாக்குறுதி நிறைவேற்றப்படாததால் அரசு மருத்துவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். மாநிலம் முழுவதும் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றுள்ளனர். அவசர அறுவை சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை தவிர வேறு எந்த மருத்துவ பணியிலும் அரசு மருத்துவர்கள் ஈடுபட மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்