"அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி" - சென்னை வானிலை ஆய்வு மையம்

அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் அடுத்த இரு தினங்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
x
அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் அடுத்த இரு தினங்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், குமரி, நெல்லை, ராமநாதபுரம், திருவள்ளூர், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்தார். கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், சேலம், மதுரை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய கூடும் என்றும் அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்