அ.ம.மு.க.வை கட்சியாக பதிவு செய்ய அ.தி.மு.க. எதிர்ப்பு
அ.ம.மு.க.வை கட்சியாக பதிவு செய்வது தொடர்பான விசாரணை, இந்திய தேர்தல் ஆணையத்தில் தொடங்கியது.
அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்த தினகரன் கடந்த ஆண்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பை தொடங்கினார். பின்னர் அதை கட்சியாக பதிவு செய்வது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பம் செய்தார். இதையடுத்து அ.ம.மு.க. வை கட்சியாக பதிவு செய்வது குறித்து யாரேனும் ஆட்சேபனை தெரிவிப்பது என்றால் ஒரு மாதத்திற்குள் தெரிவிக்க வேண்டும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு பத்திரிகைகளில் இந்திய தேர்தல் ஆணையத்தால் விளம்பரம் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில், கட்சியாக பதிவு செய்வது தொடர்பான விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது அ.ம.மு.க. சார்பில் மூத்த வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் ஆஜராகியுள்ளார். அ.தி.மு.க. சார்பில் அ.ம.மு.க. வை கட்சியாக பதிவு செய்ய கூடாது என்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story