பிரபல மசாலா பொருட்கள் தயாரிப்பு ஆலையில் தீ விபத்து

தேனி மாவட்டம் கோடாங்கிபட்டியில் உள்ள மசாலா பொருட்கள் தயாரிக்கும் ஆலையில், ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் ஆயின.
x
தேனி மாவட்டம் கோடாங்கிபட்டியில் உள்ள மசாலா பொருட்கள் தயாரிக்கும் ஆலையில், ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் ஆயின. கட்டுக்கடங்காமல் எரிந்து வரும் தீயை கட்டுப்படுத்த தீயணைப்புதுறையினர் போராடி வருகின்றனர். பத்து தீயணைப்பு வண்டிகள் தீயணைப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. குளிர் சாதன  பெட்டியில் ஏற்பட்ட மின் கசிவே தீ விபத்து ஏற்பட காரணமாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்