அமைச்சர் ஜெயக்குமாரை ஆசீர்வதித்த பூம்பூம்மாடு

சென்னை பட்டினப்பாக்கத்தில் தனது வீட்டின் அருகே நடைபயிற்சி மேற்கொண்டு இருந்த அமைச்சர் ஜெயகுமாரை, அவ்வழியே வந்த பூம்பூம்மாடு ஆசீர்வதித்த காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
x
சென்னை பட்டினப்பாக்கத்தில் தனது வீட்டின் அருகே நடைபயிற்சி மேற்கொண்டு இருந்த அமைச்சர் ஜெயகுமாரை, அவ்வழியே வந்த பூம்பூம்மாடு ஆசீர்வதித்த காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு பூம் பூம் மாட்டுக்காரர் ஒருவரை நேரில் பார்க்கும் வாய்ப்பு  கிடைத்தது, மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மாட்டின் தலையசைப்பும், பூம் பூம் மாட்டுக்காரரின் பேச்சும் தன்னுள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக கூறியுள்ள ஜெயக்குமார், இவர்களை போன்றவர்களை காப்பாற்றுவதும் கீழடி போன்ற நாகரீகத்தை காப்பதும் ஒன்றுதான் என்றும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்