நடிகை நிலானியை போனில் மிரட்டியதாக புகார் : வெளிநாட்டுப் பொறியாளர் கைது

சின்னத்திரை நடிகை நிலானியை செல்போனில் மிரட்டிய புகாரில், சாப்ட்வேர் என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.
நடிகை நிலானியை போனில் மிரட்டியதாக புகார் : வெளிநாட்டுப் பொறியாளர் கைது
x
சென்னையை அடுத்த மதுரவாயல், அஷ்டலட்சுமி நகரில், சின்னத்திரை நடிகை நிலானி, கணவரை பிரிந்து இரண்டு குழந்தை களுடன் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில்  ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு எதிராக நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை, போலீஸ் உடையில் பேசி, ஆடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதனிடையே தனது காதலருடன் ஏற்பட்ட மோதலால் தற்கொலைக்கு முயன்று அதில் இருந்தும் நிலானி மீண்டு வந்தார். அதன் பின், வெளிநாட்டில் பொறியாளராக பணியாற்றி வரும் வேலூரைச் சேர்ந்த மஞ்சுநாதன் என்பவருடன் அவர் நெருக்கமாக பழகியதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் மஞ்சு நாதனுக்கு திருமணமானது தெரிய வந்ததையடுத்து, நிலானி விலகி சென்றுள்ளார். ஆத்திரமடைந்த மஞ்சுநாதன், செலவு செய்த பணத்தை திருப்பி தருமாறு, நிலானியை செல்போனில், ஆபாசமாக பேசி தொந்தரவு செய்தாக கூறப்படுகிறது. இது குறித்து நிலானி சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதனிடேயே வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பிய மஞ்சுநாதனை போலீசார் கைது செய்தனர். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.  


Next Story

மேலும் செய்திகள்