விமான பணிப்பெண்கள் இருவரை தாக்கிய நால்வர் கும்பல் : புகாரின் பேரில், பிரபல பல்பொருள் அங்காடி ஊழியர்கள் கைது

சென்னையில், விமான பணிப் பெண்களை வழிமறித்து சில்மிஷம் செய்த, பிரபல பல்பொருள் அங்காடி ஊழியர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமான பணிப்பெண்கள் இருவரை தாக்கிய நால்வர் கும்பல் : புகாரின் பேரில், பிரபல பல்பொருள் அங்காடி ஊழியர்கள் கைது
x
சென்னை பல்லாவரம் பகுதியில், நள்ளிரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்த விமான பணிப் பெண்கள் இருவரை, திருநீர்மலை பகுதியில் இளைஞர்கள் நால்வர் வழிமறித்து தாக்கியுள்ளனர். கை பைகளை பறித்த அவர்கள், இரு பெண்களையும் மானபங்கம் செய்ய முயன்றுள்ளனர். இதை தொடர்ந்து, அவர்கள் கூச்சலிட்ட நிலையில், ஸ்கூட்டரை பறித்துக்கொண்டு இளைஞர்கள் நால்வரும் தப்பிவிட்டனர். உடலில் காயங்களுடன் வீட்டுக்குச் சென்ற பெண்கள், திருநீர்மலை பகுதியில் நடந்த சம்பவம் குறித்து, சங்கர்நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இதைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், குரோம்பேட்டை நாகல்கேணியில் உள்ள பிரபல பல்பொருள் அங்காடி ஊழியர்களான, பல்லாவரத்தைச் சேர்ந்த சைன், பிரேம்குமார், அவிநாஷ், பெருங்களத்தூர் பார்வதி நகரைச் சேர்ந்த செந்தில்குமார் ஆகிய நால்வரை கைது செய்துள்ளனர்.  


Next Story

மேலும் செய்திகள்