பித்ரு தோஷம் போக்கும் மகாளய அமாவாசை : முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த பக்தர்கள்

மஹாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் திரண்ட லட்சக்கணக்கான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
x
மஹாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் திரண்ட லட்சக்கணக்கான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள், கடற்கரையில் திதி கொடுத்தனர். இதையடுத்து, 22 தீர்த்தங்களில் புனித நீராட சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பக்தர்கள் நலன் கருதியும், கூட்டத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தவிர்க்கவும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்