ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி மீது தாக்குதல் : இரும்பு கம்பியால் தாக்கிய கும்பல் - சிசிடிவி காட்சிகள்

மதுரை - சோழவந்தான் அருகே பணம் கொடுக்கல் - வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் கரட்டுப்பட்டியை சேர்ந்த ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் சுப்பிரமணியன் என்பவர் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டார்.
ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி மீது தாக்குதல் : இரும்பு கம்பியால் தாக்கிய கும்பல் - சிசிடிவி காட்சிகள்
x
மதுரை - சோழவந்தான் அருகே பணம் கொடுக்கல் - வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் கரட்டுப்பட்டியை சேர்ந்த ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் சுப்பிரமணியன் என்பவர் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டார். தென்னந்தோப்பு வாங்க, உறவினர்களிடம் கொடுத்த 16 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி கேட்ட போது, தகராறு ஏற்பட்டது. இருசக்கரவாகனத்தில் சென்ற சுப்பிரமணியத்தை தாக்கியதாக செல்வம் மற்றும் அவரது மனைவி கவிதா இருவரும் கைதாகியுள்ள நிலையில், தலைமறைவான பிரகாசை போலீசார் தேடி வருகின்றனர்.   

Next Story

மேலும் செய்திகள்