கொள்ளிடம் ஆற்றில் பரிசல் பயணம் : படகு கவிழ்ந்ததால் பரபரப்பு

அரியலூர் அருகே ஆற்றைக் கடக்க முயன்ற போது படகு கவிழ்ந்த விபத்தில் படகில் பயணித்த 30 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
கொள்ளிடம் ஆற்றில் பரிசல் பயணம் : படகு கவிழ்ந்ததால் பரபரப்பு
x
அரியலூர் மாவட்டம் மேலராமநல்லூர் கீழராமநல்லூர் கிராமத்தின் நான்கு புறமும் கொள்ளிடம்  ஆறு செல்கிறது. இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றில் கடந்த 3 நாட்களாக அதிக அளவில் தண்ணீர் செல்வதால் படகின் மூலமே கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர். 

இந்நிலையில் அக்கரையிலிருந்து மேலராமநல்லூர் கிராமத்திற்கு ஆற்றைக் கடந்து செல்ல முயன்ற படகு நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த 30 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்