ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாட்டம்

கேரளாவில், ஓணம் பண்டிகை, வழக்கம் போல், இந்தாண்டும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருவனந்தபுரத்தில் கூடிய மக்கள், அத்தப்பூ கோலமிட்டு, சென்டை மேளம் முழங்க, ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாட்டம்
x
கேரளாவில், ஓணம் பண்டிகை, வழக்கம் போல், இந்தாண்டும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருவனந்தபுரத்தில் கூடிய மக்கள், அத்தப்பூ கோலமிட்டு, சென்டை மேளம் முழங்க, ஆடிப்பாடி மகிழ்ந்தனர். 

தமிழகத்திலும் களை கட்டிய ஓணம் கொண்டாட்டம் : 

மகாபலி சக்கரவர்த்தியின் அகந்தையை திருமால் அழித்ததை நினைவு கூறும் வகையில், ஓணம் திருவிழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

சென்னை - மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்திய மலையாள மொழி பேசும் மக்கள், பின்னர், ஓணம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.

கேரள மாநிலத்தையொட்டி இருக்கும் கோவையில், அத்தப்பூ கோலமிட்டு, சென்டை மேளம் முழங்க, ஓணம் பண்டிகை களை கட்டியது. 

இதேபோன்று, நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி ஆகிய நகரங்களிலும், ஓணம்  பண்டிகை, வழக்கம் போல், இந்தாண்டும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்