விவசாய பாசனத்திற்காக வீராணம் ஏரி திறப்பு

வீராணம் ஏரி பாசனத்திற்காக இன்று திறக்கப்பட்டது.
x
வீராணம் ஏரி பாசனத்திற்காக இன்று திறக்கப்பட்டது. ஏரியை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் திறந்து வைத்தார். மேட்டூர் அணையில் இருந்து கடந்த மாதம் 13ஆம் தேதி பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் கல்லணையை வந்தடைந்தது. கல்லணையிலிருந்து கீழணைக்கு அனுப்பப்பட்ட தண்ணீர் படிப்படியாக வீராணம் ஏரியில் தேக்கி வைக்கப்பட்டது. வீராணம் ஏரி ஏறத்தாழ முழு கொள்ளளவை எட்டி விட்ட நிலையில், தற்போது விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பாசனத்திற்கு திறக்கப்பட்டது.  அமைச்சர் சம்பத் மற்றும் கடலூர் ஆட்சியர் ஆகியோர் பூஜை போட்டு ஏரியை திறந்து வைத்த நிலையில், சுமார் 400 கனஅடி நீர் விவசாயத்திற்காக வழங்கப்பட்டு வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்