விபத்தை ஏற்படுத்திய வழக்கில் சார்பு நீதிபதி பணியிடை நீக்கம்

அஜாக்கிரதையாக செயல்பட்டு விபத்தை ஏற்படுத்திய வழக்கில், அரூர் சார்பு நீதிமன்ற நீதிபதி ராஜேந்திர கண்ணா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
விபத்தை ஏற்படுத்திய வழக்கில் சார்பு நீதிபதி பணியிடை நீக்கம்
x
அஜாக்கிரதையாக செயல்பட்டு விபத்தை ஏற்படுத்திய வழக்கில், அரூர் சார்பு நீதிமன்ற நீதிபதி ராஜேந்திர கண்ணா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.  நாமக்கல் மாவட்டத்தில் பணியாற்றிய போது நடைபெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்த நபரின் உறவினர் தொடர்ந்த வழக்கில், நீதிபதி ராஜேந்திர கண்ணா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய, காவல்துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து சார்பு நீதிபதி ராஜேந்திர கண்ணா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதற்கான உத்தரவின் நகலை, தருமபுரி மாவட்ட நீதிபதி கந்தவேல் நேரில் வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்