மெட்ரோ ரயிலில் 1.91 கோடி பேர் பயணம் : ஆகஸ்ட் மாதத்தில் 29 லட்சம் பேர் பயணம்

நடப்பாண்டில் ஜனவரி துவங்கி ஆகஸ்ட் வரை சென்னை மெட்ரோ ரயிலில் 1 கோடியே 91 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
மெட்ரோ ரயிலில் 1.91 கோடி பேர் பயணம் : ஆகஸ்ட் மாதத்தில் 29 லட்சம் பேர் பயணம்
x
நடப்பாண்டில் ஜனவரி துவங்கி ஆகஸ்ட் வரை சென்னை மெட்ரோ ரயிலில் 1 கோடியே 91 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். ஆகஸ்ட் மாதம் மட்டும் 29 லட்சத்து 65 ஆயிரத்து 307 பேர் பயணித்து உள்ளனர். மேலும் ஆகஸ்ட் மாதத்தில் 19 நாட்களில் தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  இதற்கிடையே, மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக, சென்னை அண்ணாசாலையில் மீண்டு​ம் இருவழிப் பாதையாக மாற்றி, 11 மற்றும் 12ம் தேதிகளில் இரண்டு நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்து சோதனை ஓட்டம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்