கணினி ஆசிரியருக்கான தேர்வு முடிவுகளை வெளியிட தடை : தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு

கடந்த ஜூன் மாதம் நடந்த கணினி ஆசிரியருக்கான தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது
கணினி ஆசிரியருக்கான தேர்வு முடிவுகளை வெளியிட தடை : தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு
x
கடந்த ஜூன் மாதம் நடந்த கணினி ஆசிரியருக்கான தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. எந்த மொழியில் தேர்வு நடத்தப்படும் என குறிப்பிடாத நிலையில், தேர்வில் ஆங்கிலத்தில் மட்டுமே கேள்விகள் இருந்ததால்,  தேர்வை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கு, மீண்டும் விசாரணைக்கு வந்தது.  ஆசிரியர் தேர்வு வாரியம் தரப்பில் அவகாசம் கோரப்பட்டதால், அடுத்த வாரத்துக்கு வழக்கை ஒத்திவைத்த நீதிபதி , தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்