உணவு விடுதிக்குள் புகுந்த 5 அடி நீள நல்லபாம்பு : நல்ல பாம்பை லாவகமாக மீட்ட காவல் ஆய்வாளர்

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உணவு விடுதியில் புகுந்த 5 அடி நீள நல்ல பாம்பை, காவல் ஆய்வாளர் ஒருவர் பிடித்து கால்வாயில் விட்டார்.
உணவு விடுதிக்குள் புகுந்த 5 அடி நீள நல்லபாம்பு : நல்ல பாம்பை லாவகமாக மீட்ட காவல் ஆய்வாளர்
x
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உணவு விடுதியில் புகுந்த 5 அடி நீள நல்ல பாம்பை, காவல் ஆய்வாளர் ஒருவர் பிடித்து கால்வாயில் விட்டார்.  ரெட்டியார்புரம் விளக்கு என்ற பகுதியில் உள்ள உணவு விடுதியில் நேற்று 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று புகுந்தது. ஊழியர்களின் அலறல் சப்தம்கேட்டு அங்கு சென்ற வீரவநல்லூர் காவல்நிலைய ஆய்வாளர் சாம்சன், அந்த நல்ல பாம்பை லாவகமாக பிடித்து, அருகாமையில் இருந்த கால்வாய் பகுதியில் விட்டார். காவல் ஆய்வாளர் பாம்பை பிடிக்கும் காட்சிகள், அப்பகுதியில் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்