மொகரம் - ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் துக்கம் அனுசரிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே மொகரம் தினத்தையொட்டி ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் உடலில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் கீறிக்கொண்டு ஊர்வலம் சென்றனர்.
மொகரம் - ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் துக்கம் அனுசரிப்பு
x
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே மொகரம் தினத்தையொட்டி ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் உடலில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் கீறிக்கொண்டு ஊர்வலம் சென்றனர். முகமது நபியின் பேரனாகிய, இமாம் உசேன் கொல்லப்பட்ட தினத்தை ஷியா பிரிவினர் துக்க நாளாக அனுசரித்து வருகின்றனர். இதனையொட்டி நேற்று ஜெகதேவி பகுதியைச் சேர்ந்த ஷியா பிரிவு இஸ்லாமியர்கள், தங்கள் உடலை கூர்மையான ஆயுதங்களால் கீறிக்கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றனர். இதில் தமிழகம், கர்நாடகாவை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களது துக்கத்தை வெளிப்படுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்