ஏழு பேரை விடுதலை செய்யக் கோரிய மனு : நளினி மனு தள்ளுபடி

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரை விடுவிக்கக் கோரி நளினி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
x
ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானத்துக்கு தமிழக ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில், முன்கூட்டியே விடுதலை செய்யும் தீர்மானம் தொடர்பான பரிந்துரைக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு தொடர்ந்தார். இந்த மனு மீது நீதிபதிகள் சுப்பையா, சரவணன் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கின் இறுதிகட்ட வாதங்களை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது, தண்டனையைக் குறைப்பது உள்ளிட்ட மாநில அரசின் அதிகாரத்தை நீதிமன்றங்கள் செயல்படுத்த முடியாது என்று கூறி நளினி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்