விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் - மு.க. ஸ்டாலின்

ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெறப்பட்ட ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை கொண்டு, நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
x
ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெறப்பட்ட ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை கொண்டு, நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். டெல்டா மாவட்ட விவசாயிகள் சார்பில் தஞ்சையில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய அவர், இந்த கோரிக்கையை எழுப்பினார்.

நாடாளுமன்ற தேர்தலில், வாக்களிக்காததால், தமிழக மக்களை, பாஜக  பழி வாங்குவதாக அவர் குறிப்பிட்டார். காவிரி டெல்டா படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்திய மு.க. ஸ்டாலின், காவிரி டெல்டாவை பாதுகாத்தால் தான், தமிழகத்தை பாதுகாக்க முடியும் என்று குறிப்பிட்டார். இந்த கருத்தரங்கில், நாடாளுமன்ற - சட்டப்பேரவை உறுப்பினர்கள், விவசாய சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர். மேகதாது திட்டத்தை கைவிட வேண்டும் , காவிரி - கோதாவரி இணைப்பு திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 10 தீர்மானங்கள் , முடிவில் நிறைவேற் றப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்