கன்னியாகுமரி : கடல் சீற்றத்தால் வீடுகளுக்குள் தண்ணீர்... விடிய விடிய தூக்கத்தை தொலைத்த மக்கள்

கன்னியாகுமரி அருகே திடீரென ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக, வீடுகளுக்கு தண்ணீர் புகுந்ததால், மீனவர்கள் கடும் அவதியுற்றனர்.
x
அழிக்கால், பிள்ளைத்தோப்பு மீனவ கிராமங்களில் உள்ள வீடுகளில் திடீரென கடல்நீர் உட்புகுந்தது. ஏராளமான வீடுகளில் கட்டில், டி.வி. மெத்தை, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்களும் தண்ணீரில் மூழ்கின. படகுகளில் உள்ள இயந்திரம், வலைகள் சேதம் அடைந்தன. கடல் நீர் உட்புகுந்ததால் தூக்கத்தை தொலைத்த மீனவர்கள், மேடான பகுதியில் உள்ள உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். 10 ஆண்டுகளாக இதுபோல் நீடிப்பதால், தூண்டில் வளைவு அமைப்பது மட்டுமே நிரந்தர தீர்வு என மீனவர்கள் தெரிவிக்கின்றனர். நபார்டு வங்கி உதவியுடன் இந்த பகுதியில் 10 கோடி ரூபாய் செலவில் தூண்டில் வளைவு அமைக்க அரசு திட்டம் வகுத்த பின்னும், அதை செயல்படுத்துவதில் அதிகாரிகள் வேகம் காட்டுவதில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்