கார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கு - சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகனும், காங்கிரஸ் எம்பியுமான கார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கில், சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க, சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
கார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கு - சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு
x
கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காடு கிராமத்தில் நிலம் விற்றதின் மூலம் கிடைத்த வருமானத்தில் ஒரு கோடியே 35 லட்சம் ரூபாயை கார்த்தி சிதம்பரமும், அவரது மனைவி ஸ்ரீ நிதியும் காட்டவில்லை என வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்திருந்தது. எழும்பூர் பொருளாதார நீதிமன்றத்தில் இருந்து சிறப்பு நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்றியதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கு, நீதிபதி ஆதி கேசவலு முன், விசாரணைக்கு வந்தது.  கார்த்தி சிதம்பரம் தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க மறுத்து, வழக்கை வரும் 30 ம் தேதிக்கு ஒத்திவைத்து, உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்