முல்லைபெரியாறு நீர்பிடிப்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி வழக்கு - கேரள அரசுக்கு நோட்டீஸ்

முல்லைபெரியாறு நீர்பிடிப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில், கேரள அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
x
முல்லைபெரியாறு அணைக்கு மத்திய காவல்துறை படையை நியமிக்க கோரியும், ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வலியுறுத்தியும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக கூறினார். குறுக்கிட்ட மனுதாரர் வழக்கறிஞர், அது கேரள ஆக்கிரமிப்பு தொடர்பானது என்றும், இது தமிழக அரசின் வரம்பிற்குட்பட்ட 152 அடி வரையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரும் வழக்கு என்றும் விளக்கம் அளித்தார். மேலும், ஆக்கிரமிப்புகள் இருப்பது மத்திய அரசின் ரகசிய அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பு தெரிவித்தது. வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், கேரள அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.  

Next Story

மேலும் செய்திகள்