காஷ்மீரில் கைது செய்யப்பட்டு, வீட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

காஷ்மீரில் கைது செய்யப்பட்டு, வீட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி, புதுடெல்லியில் வருகிற 22 ம் தேதி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
காஷ்மீரில் கைது செய்யப்பட்டு, வீட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
x
காஷ்மீரில் கைது செய்யப்பட்டு, வீட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி, புதுடெல்லியில் வருகிற 22 ம் தேதி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த கண்டன ஆர்ப்பாட்டம், புதுடெல்லி ஜந்தர் மந்தரில் பகல் 11 மணிக்கு துவங்கும் என தெரிவித்துள்ளார். பிரிட்டிஷாரிடம் போராடி பெற்ற சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் சர்வாதிகார நடவடிக்கை மூலம் பிடுங்கிக் கொள்ள மத்தியில் ஆளும் பாஜக அரசு முயற்சி செய்வதாக ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார். எனவே, பாஜக அரசின் முயற்சியை தடுத்தே தீர வேண்டியது, ஜனநாயகத்தின் நம்பிக்கை கொண்ட அனைத்துக் கட்சிகளுக்கும் ஏற்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டி உள்ளார். ஆகவே, டெல்லியில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற
உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்